தான் ஒரு போதும் 'டுவிட்டர்' (சமூகவழி இணையத்தளம்) உபயோகித்ததில்லை என அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடனான கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நான் ஒரு போதும் டுவிட்டர் பயன்படுத்தியதில்லை. ஆனால் இன்றைய இளைஞர்கள் எப்போதும் கையில் ஒரு எலக்ட்ரானிக் உபகரணத்தை வைத்துக்கொண்டு, பிஸியாக டைப்பிங் செய்துகொண்டிருக்கிறார்கள். எனக்கு அவ்வளவு வேகமாக கைத்தொலைபேசியில் டைப்பிங் செய்ய கைகள் வராது. ஆனால் நான் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார்.
எனினும் பாரக் ஒபாமா எனும் பெயரில் ஒபாமாவுக்கான டுவிட்டர் பக்கம் ஒன்று இயங்கிவருவதும், அதில் அவருடைய நாளாந்த நடவடிக்கைகளுக்கான குறிக்கைகள் இடம்பெற்றுவருவதும் குறிப்பிடத்தக்கது. இதனை இலட்சக்கணக்கானோர் following செய்வதும், கவனிக்கத்தக்கது.
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒபாமாவின் துணைவியார் மிச்சேல் ஒபாமா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், சிறுவர்கள் பேஸ்புக் பயன்படுத்துவதை அவ்வளவாக விரும்பவில்லை என தெரிவித்த கருத்துக்கள் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.தனது பிள்ளைகளையும் பேஸ்புக் பயன்படுத்த விடுவதில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
எனினும் 12-18 வயதுக்குட்பட்ட 74.4% வீதமானோர் பேஸ்புக் பயன்படுத்துவதாக கருத்துகணிப்பு ஒன்று கூறுகிறது.


