விஜயகாந்த் எந்தத் தொகுதியில் நினறாலும் அவரை எதிர்த்துப் போட்டியிடுவேன் என்று இருவருக்கும் இடையிலான மோதலின் போது தெரிவித்திருந்தார் வடிவேலு.

இன்று முதல்வரை சந்தித்து திமுக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்ததை அடுத்து, இந்த கேள்வி தூசி தட்டப்பட்டிருக்கிறது.
இன்று முதல்வரை சந்தித்து சால்வை போர்த்திய வடிவேலு, திமுக-வுக்கு ஆதரவாக பிரசசாரம் செய்யப் போவதாக அறிவித்தார். மேலும், திமுக-வின் தேர்தல் அறிக்கையை பட்டியலிட்டவர், கண்டிப்பாக திமுக வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார். அப்போது விஜயகாந்துக்கு எதிராக போட்டியிடுவீர்களா என்று அவரிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர், முதலில் விஜயகாந்த் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பதை தெரிவிக்கட்டும், பிறகு பார்க்கலாம் என்றார்.
கட்சி சார்பற் காலத்தை நகர்ததிய வடிவேலு திடீரென திமுக-வுக்கு ஆதரவு தெரிவிக்க காரணம், அவரது எதிரியான விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்து கொண்டதுதான் என கூறப்படுகிறது.


