
கடந்த ஆறாம் தேதி நடிகர் ஜெய்க்கு பிறந்தநாள். இவ்விஷயம் நடிகர் சிம்புவிற்கு ஞாபகம் வரவே அதனை சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டார் சிம்பு. அதே பின்னி மில்ஸில் இன்னொரு பகுதியில் `வேலாயுதம்` படத்தின் படப்பிடிப்பு இருந்த நடிகர் விஜயிடம் இவ்விஷயத்தைச் சிம்பு சொல்ல, உடனே விஜய் கலந்துகொண்டு ஜெய்யின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
அதோடு நிற்காமல் நடிகர் அஜித்திற்கும் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஜெய் பிறந்த நாள் குறித்து சிம்பு கூறவும், ஜெய்யை தொடர்புகொண்டு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார் நடிகர் அஜித்.
இது குறித்து ஜெய் கூறியுள்ளது “பல வருடங்களாக நான் உடன் நடிக்க ஆசைப்பட்ட எனது ஸ்பெஷல் ஹுரோவான சிம்புவுடன் வேட்டை மன்னன் படப்பிடிப்பில் இருந்தேன். அவருடன் நடிப்பதே எனது பிறந்த நாள் பரிசாக இருந்தது.
ஆனால் சிம்பு எனக்கு இளைய தளபதி விஜய்யை அழைத்து அதைவிடப் பெரிய இன்ப அதிர்ச்சி கொடுப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.. என் அபிமான நடிகர் இளைய தளபதியுடன் என் பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.
அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு என் பிறந்தநாள் பரிசாக அடுத்த ஆனந்த அதிர்ச்சி அளித்தார். என் பிறந்தநாள் பற்றி அஜீத்திடம் அவர் சொல்ல, மங்காத்தா படப்பிடிப்பில் இருந்து அஜீத் என்னை போன் மூலம் தொடர்புக்கொண்டு வாழ்த்தினார். எனது வாழ்நாளில் மறக்க முடியாத பிறந்த நாளாக இது அமைந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்தவர் ஜெய் என்பது குறிப்பிடத்தக்கது.


