ஆர்யாவுடன் மதராசப்பட்டினம் படத்தில் ஜோடியாக நடித்தவர் எமிஜாக்சன். அந்த படத்திற்கு பிறகு தமிழில் புதிய படங்கள் இல்லாததால் இந்தியில் கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் எமி.

இந்நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த தெய்வத்திருமகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார் எமி. அப்போது ஆர்யாவும் அவருடனேயே இருந்தார். தன்னுடன் அமர்ந்திருக்கும்போதே எமியை கலாய்க்கத் தொடங்கிய ஆர்யா, மேடையில் எமியுடன் தோன்றியபோதும் செமயாக கலாய்த்தார். இந்த அளவுக்கு எங்களது நட்பு நெருக்கமாக இறுக்கமாக உள்ளது என்பதை இருவருமே திரையுலகத்துக்கும், விழாவுக்கு வருகை தந்திருந்த ரசிகர்களுக்கும் வெளிச்சம் போட்டு காட்டினர்.
இதைத்தொடர்ந்து தற்போது லண்டனுக்கு பறந்து விட்டார் எமிஜாக்சன். என்றாலும் அவருக்கு இங்கிருந்தபடியே தீவிரமாக படவேட்டை நடத்தி வருகிறார் ஆர்யா. எமியைப்போல் ஒரு சிறந்த நடிகையை நான் கண்டதில்லை. அவர் மாதிரியான நல்ல நடிகைகள் தமிழ்த்திரையுலகிற்கு தேவை என்று தனக்குத்தெரிந்த இயக்குனர்களிடம் அவருக்கு சிபாரிசு செய்து வருகிறார். முக்கியமாக தன்னை புதுப்படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய வரும் படாதிபதிகளிடம், கதை கேட்கும் முன்பே கதாநாயகியாக எமியைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என்று கண்டிசன் போட்டே கதை கேட்கிறார் ஆர்யா. ஆனால் எமியின் படக்கூலி கிட்டத்தட்ட 40 லகரங்களை தொட்டு நிற்பதால் ஆர்யாவின் நிர்ப்பந்தத்துக்கு இயக்குனர்கள் செவி சாய்த்தாலும், படாதிபதிகள் முகத்தைத் திருப்பிக்கொள்கிறார்கள். ஆனபேர்தும், எதற்கும் மசியவில்லை ஆர்யா. எமிஜாக்சனை தமிழ் சினிமாவில் ஆளாக்காமல் ஓயமாட்டேன் என்ற உயரிய கொள்கையுடன் கோடம்பாக்கத்தில் வளைய வந்து கொண்டிருக்கிறார்.
ஆனால் ஆர்யா இப்படி வெளிப்படையாகவே எமிக்கு சிபாரிசு செய்து வருவதால் அவருடன் ஏற்கனகவே ஜோடி சேர்ந்த நடிகைகளும், தற்போது அவருடன் நடித்து வரும் நடிகைகளும் அவர் மீது மறைமுக அதிருப்தியில் உள்ளனர்.


