ஹோம்லியான நடிகை என்று பெயரெடுத்த சினேகாவையும் காலத்தின் மாற்றம் நீச்சல் உடை நடிகையாக்கி விட்டுள்ளது.

எனது உடல்கட்டுக்கு நீச்சல் உடை செட்டாகாது என்று இத்தனை நாளும் தப்பித்து வந்த சினேகாவை ஒரு தெலுங்குப்பட இயக்குனர் நீச்சல் உடையில் நடித்தால் மட்டுமே ஹீரோயின் சான்ஸ் என்று சினேகாவுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க, அதற்கு சம்மதம் தெரிவித்திக்கிறார் .
இதுபற்றி சினேகா கூறும்போது,
சினேகா என்றாலே குடும்ப நடிகை என்ற முத்திரை ஆழமாக விழுந்திருக்கிறது. ஆனால் காலத்தின் மாற்றம், கதைகளின் மாற்றம் காரணமாக என்னையும் சில இயக்குனர்கள் முன்பே முத்தக்காட்சி, நீச்சல் உடை என்றெல்லாம் நடிக்க கேட்டனர். நான்தான் பிடிவாதமாக மறுத்து வந்தேன். ஆனால் தொடர்ந்து மறுத்தால் படமே இல்லாத நிலைதான் ஏற்படும் என்பதால் ஒரு தெலுங்கு படத்தில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறேன். என்றாலும் ஓவர் வல்கராக இல்லாமல் முடிந்தவரை உடம்பை கவர் பண்ணியே நடிப்பேன். அதற்கான உத்தரவாதத்தையும் அந்த இயக்குனர் தந்திருக்கிறார் என்று சொல்கிறார் சினேகா.


