
அதன்காரணமாக ஆளும்கட்சியை எதிர்த்து சமீபத்தில் சட்டப்படி குற்றம் என்றொரு படத்தை இயக்கினார் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன். அதன்தொடர்ச்சியாக தேர்தலில் விஜய்யின் மக்கள் கட்சி ஜெயலலிதாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அவரை சந்தித்து தெரிவித்தார்.
இதனால் விஜய்யின் ரசிகர்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் அடுத்து வெளிவரவிருக்கும் விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் ஆடியோ விழாவில் ஜெயலலிதா கலந்து கொள்வார் என்று செய்திகள் அடிபடுகின்றன.
ஆனால் விஜய்தரப்பில் இதுபற்றி விசாரித்தால், எங்களுக்கும் தகவல் வருகிறது. ஆனால் உறுதி செய்யப்படவில்லை என்கிறார்கள்.


