
தனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பேசிய ஜூலியன் அசான்ஞ்ச் கூறியதாவது;
பொதுமக்களிடம் இருந்தே நன்கொடை வசூலிக்கப்படுகிறது. பொதுமக்களால் வாரம் தோறும் நேரடியாக எங்களுக்கு ஆதரவு கிடைக்கிறது. எங்களுடைய பணி மதிப்பு வாய்ந்தா? இல்லையா என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் உங்களுடைய பணம்மூலம் எங்களுக்கு வாக்களித்து வருகிறீர்கள். நாங்கள் தவறு செய்கிறோம் என நீங்கள் நம்பும் பட்சத்தில் நீங்கள் எனக்கு ஆதரவு தரமாட்டீர்கள். எங்கள் பணியால் நாங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என நீங்கள் நம்பும் பட்சத்தில், வலுவான கருத்தை நீங்கள் கொண்டிருப்பீர்கள்.
இவ்வாறு ஜூலியன் அசான்ஞ்ச் கூறியுள்ளார்.
இந்தியா குறித்து அமெரிக்க அரசு தெரிவித்த விக்கி லீக் தகவல்கள் சமீபத்தில் பெரும்புயலைக்கிளப்பியது. 2008-ம் ஆண்டு அணு சக்தி மசோதா வுக்கு எதிராக இடது சாரி கட்சிகள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டனர். இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக அரசு சார்பில் எம்.பி.க்களுக்கு பணம் தரப்பட்டதாக பரபரப்பு செய்தியை விக்கீ லீக் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


