உலகின் முதன் முதலில் பேசப்பட்ட மொழியானது தென் ஆப்ரிக்காவில் தோன்றியது என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
ஆப்ரிக்காவில் இருந்து வெளியேற மனிதர்களாலேயே மொழியானது பிற நாடுகளுக்கும் வாய்மொழியாக பரவியது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள அம்சமாகும்.இந்த வாய்மொழி தொடர்பானது பின்னர் உலகம் முழுவதும் உள்ள மனிதனின் மரபில் ஒரே முறையில் பரவியது. மிகப்பெரிய இடம் பெயர்தல் மூலம் முறையாக பரவியிருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர். நியூசிலாந்தில் உள்ள அக் லாண்ட் பல்கலைகழகத்தின் உளவியல் பேராசிரியர் குயென்டின் அட்கின்சன்தான் இந்த ஆய்வை மேற்கொண்டார்.
உலக மொழிகளை எல்லாம் ஆய்வு செய்து அதனை 504 ஆக பகுத்து அதில் இருந்தும் சிறிது சிறிதாக பகுத்தறிந்து பேச்சு ஒலிகளின் மூலத்தை கண்டறிந்தார்.
இந்த ஆய்வின் மூலம் ஆப்ரிக்க மொழிகள் அதிலும் குறிப்பாக ஆப்ரிக்க கண்டத்தின் தென்பகுதியில் பேசப்பட்ட மொழியானது பல வகை தொகுதிகளை கொண்ட பேச்ச ஒலிகளாக மாறியது. இப்படியாக இங்கிருந்து குடிபெயர்ந்தவர்களால் பேச்சு ஒலிகள் மாறி, மாறி புதிய புதிய மொழிகளாக பிறந்தது. மொழி பரவியதை கண்டிபிடிப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் சிரமமாக இருந்தது. மொழியை மதிப்பிட்டே அதன் மூலத்தை கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.
உதாரணமாக சகோதரர் என தமிழில் குறிப்பிடப்படும் பிரதர் என்ற ஆங்கில வார்த்தையானது, சமஸ்கிருதத்தில் ப்ரதர் என்றும், பழைய ஐரிஷ் மொழியில் பிராதிர் என்றும் உச்சரிக்கப்பட்டது. லத்தீன் மொழியில பிராதர் என்றும், கிரேக்க மொழியில் ப்ராதார் என்றும் உச்சரிக்கப்படுகிறது. இந்த மொழி வித்தியாசங்கள் மூலம் பழமையான வார்த்தை கட்டமைக்கப்படுகிறது. அந்த மொழிகளில் பயன்படுத்தப்படும் உச்சரிப்புகள் மற்றும் வெவ்வேறு சப்தங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தார். ஆய்வில், மொழியானது ஏறத்தாழ 1 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே பேசப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்டவர்கள் ஓரிடத்தில் நிலையாக இருந்து வாழ்ந்த போது அங்கு பேசப்பட்ட மொழியும் நிலைத்துள்ளது. அதுவே, சிறு சிறு குழுக்களாக மக்கள் பிரிந்து செல்லும் போது அவர்களின் இடையே பேசப்பட்ட மொழி காலப்போக்கில் மாற்றம் பெற தொடங்கியது. தலைமுறைகள் மாற மாற மொழிகளும் மாற்றம் பெற்றுள்ளன. உலகின் முக்கிய மான ஆய்வாக கருதப்படும் இது பிரபல சயன்ஸ் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.


