சீனாவில் கல்வியைத் தொடர்ந்து வந்த ஐம்பது மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
சீனாவிற்கு சொந்தமான இரண்டு விமானங்களில் குறித்த மாணவர்கள் இன்று மாலை இலங்கை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய சுகாதார பிரிவின் மருத்துவர் சன்திக்க பண்டார விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
சய்னா ஈஸ்டர்ன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் இன்று மாலை 5.54 மணிக்கும் 6.34 மணிக்கும் வந்து இறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு நாடு திரும்பிய அனைத்து மாணவ, மாணவியரும் சிறந்த உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர் சன்திக்க கொழும்பு ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரையில் 80 பேர் வரையில் பலியாகியுள்ள நிலையில், 3000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையிலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.