யாழ். பல்கலைக்கழகத்தில் வடக்கைச் சாராத முஸ்லிம்களுக்கு அதிக நியமனங்கள்!!


யாழ். பல்கலைக்கழகத்தில் வடக்கு மாகாணத்தைச் சாராத முஸ்லிம்கள் ஊழியர்களாக நியமிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கல்வி சாரா ஊழியர்களாக 430 பேர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. அதில் 115 பேர் முஸ்லிம்கள் என்று கூறப்படுகின்றது.

குறிப்பாக முஸ்லிம் ஒருவர் உயர்கல்வி அமைச்சராக இருந்தவர்கள் அல்லது இருக்கின்றார் என்றால் அவர் தனது இனம் மற்றும் மதம் சார்ந்து பல்கலைக்கழகத்திற்கு ஆளணிகளை நியமித்திருக்கின்றார்.

அதுவும் வடக்கு மாகாணத்தைச் சாரதவர்களே பெரும்பாலும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். உண்மையில் வடக்கு மாகாணத்தைச் சார்ந்த பெருமளவிலான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கின்றனர்.

அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புக்களை வழங்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் வெளிமாகாணங்களில் இருந்த கொண்டு வந்த பலரையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்காக நாங்கள் முஸ்லிம் மக்களுக்கு எதிரானவர்கள் இல்லை. வடக்கிலுள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இவ்வாறு வெளியிடங்களிலிருந்த முஸ்லிம்களை கொண்டு வந்த நியமிப்பது போது குறைந்தபட்சம் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அந்த மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் மக்களாவது இவ்வாறு நியமிக்கப்படுவார்களா என்ற கேள்வி எழுகின்றது.

ஆக இங்கு ஆயிரக்கணக்கானோர் வேலையில்லாமல் இருக்கின்ற நிலையில் இவர்களை ஒதுக்கிவிட்டு வெளியிலிருந்து கொண்டு வந்து புகுத்துவது எந்த விதத்தில் சரியானது.

ஆனால் இது தொடர்பில் பேசுவதற்கு தொழிற்சங்கங்களும் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளும் தயங்குகின்றனர். ஏனெனில் இங்குள்ள மக்கள் பிரதிநிதிகள் சிலரும் தமது ஆட்களை இதில் நியமித்திருக்கின்றனர்.

ஆகையால், இது தொடர்பில் தாம் ஏதும் கதைத்தால் தாம் நியமித்தவர்களுக்கும் வேலையில்லாமல் போய்விடும் என்று கருதுகின்றனர். அகவே இங்குள்ள ஒட்டு மொத்த மக்களின் நன்மைக்காக இது தொடர்பில் அவர்கள் குரல் கொடுக்க வேண்டும்.

ஆகவே இவ்வாறாக பெருந்தொகையாக முஸ்லிம் இளைஞர்களை கொண்டு வருவது ஏற்புடைய தல்ல. மேலும் இப்படி முறைதவறிய வேலைவாய்ப்புகளை வழங்குவது ஏற்றுக் கொள்ள கூடியதல்ல.

ஆகையினால் முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் அமைச்சராக வந்தால் அல்லது இருக்கின்றார்கள் என்றால் தமது இனம் சார்ந்து இங்கு வேலை வாய்ப்புக்களை வழங்குவார்கள் என்றால் தென்கிழக்கில் இதே போல தமிழ் மக்களுக்கு அவருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியுமா.

எனவே ஒரு சிலரது நலன்களுக்காக தமிழ் மக்களை ஒட்டு மொத்தத்தில் பாதிக்கின்ற செயற்பாடுகளை அனைவரும் கைவிட்டு மக்களுக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டுமென்றார்.

இதே வேளை இந்த அரசிற்கு முண்டு கொடுத்ததை தவிர தமிழ் மக்களுக்காக எதனையும் கூட்டமைப்பினர் சாதிக்கவில்லை. தேர்தல் நெருங்கும் நேரத்தில் தாம் அரசிற்கு எதிரான ஆட்கள் என்ற படத்தை காட்ட தற்போது முனைகின்றனர். அதனடிப்படையிலே அவர்களது அண்மைக்கால செயற்பாடுகளும் அமைந்துள்ளன.

குறிப்பாக திட்டத்தில் கூட மக்களது எதிர்கால நலன்கள் தொடர்பில் சிந்திக்காமல் அந்தத் திட்டத்திற்குப் பின்னால் ஓடி தமது வாக்கு வங்கியை அதிகரிப்பதை தான் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அதாவது அந்த திட்டத்திற்கு பின்னால் ஓடுகின்ற நிலைதான் உள்ளது. இதனைவிட சமுர்த்தி திட்டமும் இது போலவே பயன்படுத்தப்படுகிறது.

ஆக மொத்தத்தில் அரசியல் தீர்வு எதனையும் எட்ட முடியாத நிலையில் மக்களை பணம் கொடுத்து அல்லது ஆசைகாட்டி தமக்கு ஆதரவாக அல்லது தமது பக்கம் மாற்றுகின்ற முயற்சிகள் தான் நடக்கிறது.

இவர்களது செயற்பாடுகள் அனைத்தையும் மக்கள் நன்கு விளங்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் தமது வாக்கு வங்கிக்காக அவர்கள் இதனைச் செய்கின்றனர். இதனைவிட அவர்களுக்கு வேறு வழியில்லை என்பது போல் தற்போது செயற்படுகின்றனர் என்றார்.





Source link

Recent Articles

Follow @thalapathy_vijay_nanbas Thalapathy Vijay + Makkal Selvan Vijay Sethupat…

Follow @thalapathy_vijay_nanbas Thalapathy Vijay + Makkal Selvan Vijay Sethupathi Together in Third Look..🔥 Master Third Look from Tomorrow..at 5 PM.. Master 😎 M-agilchi pongattum, A-nbu pongattum, S-andhosham pongattum, T-hiruvizha thodangattum, E-ndrum,...

கல்முனை வடக்கு கணக்காளர் நியமனம் – ஏமாற்றியது ரணில் அரசு! அடுத்த வாரம் கூடிக்கதைக்க முடிவாம்!!

தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது என மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு- கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் கல்முனை வடக்கு...

மக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு..!

January 27, 2020ஆசிரியர் - Editorமக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்தக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கிலி கள்ளா்களால் அறுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பருத்துறை...